search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் காப்போம்"

    • தமிழகம் முழுவதுமிருந்து 2000 விவசாயிகள் பங்கேற்பு.
    • விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி திருவிழா மதுரையில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாதவா மகளிர் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 2000 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

    நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் மற்றும் வேளாண் வல்லுநர்கள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்து ஆலோசனைகள் வழங்கினர்.

    இந்நிகழ்ச்சி தொடர்பாக மண் காப்போம் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் முத்துகுமார் அவர்கள் பேசுகையில் "இயற்கை முறையில் காய்கறிகளை விளைப்பது எப்படி? அதை மதிப்பு கூட்டுவது மற்றும் சந்தைப்படுத்துவது எப்படி" என்பது தொடர்பாக இந்த விழாவில் பேசப்பட்டுள்ளது.

    மேலும், ரசாயன விவசாயத்துக்கு நிகரான மகசூலை இயற்கை முறையில் எடுப்பது எப்படி என்பதை வெற்றி பெற்ற முன்னோடி விவசாயிகள் இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இன்று ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருக்கும் ஏராளமான இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆர்வம் இருக்கும் இளைஞர்கள் இயற்கை விவசாயியாக மாறும் வகையில், மூன்று மாத பயிற்சி ஒன்றை வடிவமைத்துள்ளோம். கோவையில் உள்ள ஈஷா மாதிரி விவசாய பண்ணையில் இந்த மூன்று மாத பயிற்சி நடைபெற இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் விருப்பம் உள்ள இளைஞர்கள் அங்கேயே தங்கி மூன்று மாதம் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்" என தெரிவித்தார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராமநாதபுரத்தை சேர்ந்த முன்னோடி இயற்கை விவசாயி .ராமர் பேசுகையில் "நான் கமுதியில் 30 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறேன். பிரதான பயிராக மிளகாய் வற்றலை பயிரிட்டுள்ளேன். ஆண்டுக்கு 200 டன் மிளகாய் வற்றலை தரமான முறையில் உற்பத்தி செய்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனுக்கு கடந்த 8 ஆண்டுகளாக ஏற்றுமதி செய்கிறேன். என்னை பார்த்து இன்று கிட்டதட்ட 400 விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் என்னை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்" எனக் கூறினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் பூச்சி செல்வம் அவர்கள் நன்மை தரும் பூச்சிகள் மூலம் காய்கறி சாகுபடியை சிறப்பாக செய்யும் வழிமுறைகள் குறித்து விளக்கினார். பின்னர், பல்லடம் விவசாயி பொன்முத்து இயற்கை சந்தையை வெற்றிகரமாக உருவாக்கி நடத்துவது எப்படி என்பது குறித்து பேசினார். 

    அத்துடன், இந்த நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் பலர் இயற்கை முறையில் உற்பத்தி செய்த பொருட்களை மதிப்புக் கூட்டி பொதுமக்களுக்காக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதற்காக 40 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் போடப்பட்டு அதில் பாரம்பரிய அரிசி, சிறு தானியம், தேன், கை வினை பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. மேலும் நம் மரபு இசையை பேணி காக்க சவுண்ட் மணி அவர்கள் 80க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை கொண்டு இசை நிகழ்ச்சி நடத்தினார்.

    அதனை தொடர்ந்து வந்திருந்த அனைவருக்கும் படையல் சிவா குழுவினருடன் இணைந்து அடுப்பில்லாமல், எண்ணெய் இல்லாமல் ஆரோக்கியமான உணவு தயார் செய்து வழங்கப்பட்டது. இது மட்டுமின்றி பங்கேற்ற அனைவருக்கும் காய்கறி சாகுபடியை இயற்கை முறையில் செய்வது குறித்த கையேடும், பாரம்பரிய நாட்டு காய்கறி விதைகளும் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளே கண்டறிந்த எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற்றது.

    • கருப்பு கவுனி அரிசியை கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.
    • இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம்.

    ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பிரதேசங்களில் விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை சமவெளியில் வெற்றிகரமாக சாகுபடி செய்து ஈஷாவின் மண் காப்போம் இயக்கம் சாதனை படைத்துள்ளது.

    இது தொடர்பாக அவ்வியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா அவர்கள் கூறுகையில், "எங்களுடைய மண் காப்போம் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இயற்கை விவசாய பயிற்சிகளை மாதந்தோறும் நடத்தி வருகிறோம். அதுமட்டுமின்றி கோவை, ஈரோடு, திருவண்ணாமலை, தஞ்சாவூர் ஆகிய 4 இடங்களில் மாதிரி பண்ணைகளை உருவாக்கி பராமரித்து வருகிறோம். மொத்தம் 60 ஏக்கர் பரப்பில் பல்வேறு விதமான பயிர்களை பரிசோதனை முயற்சியாக வெவ்வேறு இயற்கை நுட்பங்களை பயன்படுத்தி பயிர் செய்து வருகிறோம்.

    அந்த வகையில், கோவையில் செம்மேடு கிராமத்தில் உள்ள எங்களுடைய மாதிரி பண்ணையில் மலைப்பிரதேசங்களில் மட்டுமே விளையும் கேரட் மற்றும் பீட்ரூட்டை தலா 30 சென்ட் என்ற பரப்பளவில் பிரதான பயிராக பயிரிட்டோம். 120 நாட்களுக்கு பிறகு தற்போது நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல பருமனாகவும் நீளமாகவும் கேரட் விளைந்துள்ளது.

    பொதுவாக காய்கறி கடைக்கு சென்று 1 கிலோ கேரட் வாங்கினால் 12 முதல் 13 கேரட் பிடிக்கும். ஆனால், நாங்கள் எந்தவித ரசாயனங்களையும் பயன்படுத்தாமல், இயற்கை முறையில் ஜீவாமிர்தம் மட்டுமே பயன்படுத்தி விளைவித்ததால் 6 அல்லது 7 கேரட்களை எடை போட்டாலே ஒரு கிலோ வந்துவிடும். அதை வைத்து பார்க்கும்போது விளைச்சலும் நல்ல முறையில் வந்துள்ளது. பூச்சி மேலாண்மைக்காகவும், நல்ல விளைச்சலுக்காகவும் வேப்பங்கொட்டை கரைசல் பயன்படுத்தினோம்.

    கேரட் மட்டுமின்றி, பீட்ரூட்டின் வளர்ச்சியும் சிறப்பாக வந்துள்ளது. இதைப்போலவே முள்ளங்கி, கொத்தமல்லி ஆகியவற்றையும் பயிர் செய்து வருகிறோம். இந்த முறை மழை அதிகமாக பெய்தபோது ஏற்பட்ட பூஞ்சை தாக்குதலுக்கு புளித்த மோர்க்கரைசல் தெளிக்கப்பட்டு நன்றாக வளர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட்டதால், விளைச்சலில் எந்தக்குறையும் ஏற்படவில்லை. நாளை நடக்கவுள்ள அறுவடையில் 1.5 டன் அளவிற்கு விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    இதேபோன்று, பாரம்பரிய நெல் ரகமான கருப்பு கவுனி அரிசியும் நாங்கள் கடந்த 4 வருடமாக முழுவதும் இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு இரண்டே கால் டன் விளைச்சல் கிடைத்துள்ளது. எங்கள் தோட்டத்திற்கு அருகில் ரசாயன விவசாயம் செய்யும் விவசாயிகள் எடுக்கும் விளைச்சலை விட இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இப்படி, நாங்கள் பரிசோதனை செய்து வெற்றி பெற்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்கள்  அனைத்தையும் விவசாயிகளுக்கு நேரடி களப் பயிற்சியாக சொல்லித் தருகிறோம். இதுவரை 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நாங்கள் இயற்கை விவசாய பயிற்சிகள் அளித்துள்ளோம். அதில் நிறைய பேர் வெற்றிகரமாகவும் லாபகரமாகவும் விவசாயம் செய்து முன்னோடி விவசாயிகளாக மாறி உள்ளனர். பின்னர், அவர்களுடைய தோட்டத்திலேயே புது விவசாயிகளுக்கு இயற்கை விவசாய பயிற்சிகளை தமிழ்நாடு முழுவதும் கற்றுக்கொடுத்து வருகிறோம்." என்றார்.

    • ஒவ்வொரு வருடமும் 14,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
    • சத்குருவின் வழிகாட்டுதலில் 'வெள்ளியங்கிரி உழவன்' நிறுவனம் துவங்கி முதலில் நிறுவனத்தின் குழு உருவாக்கப்பட்டு, பரிவர்த்தனை துவங்கியது.

    கோவை:

    கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர் மற்றும் இடைநிலை அலுவலர்களுக்கு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் இயக்குனர்கள் அந்தந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்றுவித்தனர்.

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் ஐந்து நாள் பயிற்சியான 'எக்ஸ்டென்சன் நெக்ஸ்ட் - வேளாண் விரிவாக்கத்தில் மாற்றங்களும் புதுமைகளும்' என்ற நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறை அலுவலர்களுக்கு நடந்து வருகிறது. டிசம்பர் 12 முதல் 16 வரையிலான 5 நாட்கள் நடைபெற்று வரும் இந்நிகழ்வின் நேற்றைய ஒரு பகுதி, ஈஷாவின் மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்டங்களின் செயல்முறையும் செம்மேடு பண்ணையில் பயிற்சியாக வழங்கப்பட்டது. 

    இதில் காவேரி கூக்குரல் திட்டத்தின் இயக்குனர் திரு. ஆனந்த் எத்திராஜுலு அவர்கள் பேசுகையில் திட்டத்தின் செயல்பாடுகள், சந்தித்த சவால்கள், நடந்த மாற்றங்கள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினார். "ஆரம்ப கட்டத்தில் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மரங்களை நட்டோம்.

    அதன் உயிர்பிழைப்பு சதவிகிதம் 40 சதவீதத்திற்கும் கீழாக இருந்தது. அதனை கண்டறிந்து மரங்களின் உயிர்வாழ்தல் சதவிகிதம் அதிகரிப்பதற்கு, மரங்களை விவசாயிகளின் நிலங்களில் நட்டோம். அது அவர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருந்தது. அப்போது மரங்களின் உயிர்வாழும் சதவிகிதம் ஆச்சர்யப்படும் வகையில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தது. குறிப்பாக மரம் சார்ந்த விவசாயத்தில், முதலில் பழ மரங்கள், மழை தரும் மரங்கள், மூலிகைகள் என துவங்கி விவசாயிகளுக்கு நல்ல விலை வருகின்ற வகையிலான டிம்பர் மரங்களின் தேவை இருப்பதை அனுபவத்தில் கண்டறிந்தோம்.

    அதன் பிறகு 2009-ல் தேக்கு, செம்மரம், மகோகனி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க டிம்பர் வகை மரங்களை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த மானிய விலையான 3 ரூபாயில் வழங்கினோம். இந்த டிம்பர் மதிப்பு மரங்கள் குறைந்த காலம் முதல் நீண்ட காலம் வரையிலான நிதி காப்பீடாக இருக்கும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தோம்.

    மேலும் கடந்த 15 வருடங்களாக இந்த மரம் சார்ந்த விவசாயத்தில் சாதித்த விவசாயிகளின் வழிகாட்டுதல்கள், பகிர்தல்களை பயிற்சி நிகழ்வுகளின் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு வருடமும் 14,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 2500 விவசாயிகள் முழுவதுமாக மரம் சார்ந்த இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இது அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருந்தும்படியான வேளாண்மை என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

    ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் திட்ட இயக்குனர் திரு. வெங்கட்ராசா அவர்கள் பேசுகையில், "தற்போது மத்திய துறை திட்டம் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவங்க உள்ளதாக அறிவித்து, வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாதிரி நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த 3 நாள் பங்குதாரர்கள் மாநாட்டில், ஈஷா அவுட்ரீச்-ன் திட்ட மாதிரி அமைச்சகம் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு அது இந்தியா முழுவதும் பரிந்துரைக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும் நிறுவனங்களுக்கே இத்தகைய உடன்படிக்கைக்கு வருவது என்பது சிக்கலானதாக இருக்கும்போது, அமைப்புசாரா துறையான விவசாயத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இதனை கொண்டு செல்வது சவாலான இலக்காக இருந்தது.

    சத்குருவின் வழிகாட்டுதலில் 'வெள்ளியங்கிரி உழவன்' நிறுவனம் துவங்கி முதலில் நிறுவனத்தின் குழு உருவாக்கப்பட்டு, பரிவர்த்தனை துவங்கியது. விவசாயிகளை தங்களுக்கு மட்டுமே சிந்திப்பதிலிருந்து அனைவருக்குமான தீர்வுகளை சிந்திக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்து வேளாண் துறை அமைச்சகத்தோடு இணைந்து மேலும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்க உள்ளோம்" என்றார்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மண் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்க தலைவர் பேராசிரியர் திரு. ஆனந்தராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    • வாகன ஓட்டுநர்களுக்கு ‘மண் காப்போம்’ என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்தனர்.
    • மண் காப்போம் இயக்கத்திற்கு 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் ஆதரவு

    சென்னை:

    உலக மண் தினத்தை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் சென்னையில் பல்வேறு இடங்களில் மண் வளப் பாதுகாப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று (டிசம்பர் 5) நடைபெற்றன.

    வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ரகுநாதன் தலைமை தாங்கினார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மண் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதனால், விவசாயிகளின் விளைச்சலும் குறைந்து கொண்டே வருகிறது. இழந்த மண் வளத்தை மீட்டெடுக்காவிட்டால் எதிர்கால தலைமுறையினர் பல்வேறு பாதிப்புகளை சந்திப்பார்கள்" என்றார்.

    இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், துண்டு பிரசுரங்களை விநியோகித்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கல்லூரியின் துணை முதல்வர் ராஜஸ்ரீ, சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் கோபி, ஜெயராஜ் ஆகியோரும் உடன் பங்கேற்றனர்.

    இதேபோல், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில், தில்லைநகர் சப் வே, ஆவடி பஸ் டிப்போ, மீனாட்சி கல்லூரி, வளசரவாக்கம் சிவன் பார்க், பெரம்பூர் பஸ் நிறுத்தம், மாதவரம் ரவுண்டானா உட்பட சுமார் 20 இடங்களில் 'மண் காப்போம்' இயக்கத்தின் தன்னார்வலர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். வாகன ஓட்டுநர்களுக்கு 'மண் காப்போம்' என்ற ஸ்டிக்கர்களை விநியோகித்து இவ்வியக்கத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தனர்.

    அனைத்து விவசாய நிலங்களிலும் குறைந்தப்பட்சம் 3 முதல் 6 சதவீதம் கரிம சத்து இருக்க வேண்டும். அதற்காக செயல் செய்யும் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்க தொகை வழங்க வேண்டும். மர விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கார்பன் கிரெடிட் என்ற பெயரில் மானியம் வழங்க வேண்டும். 3 சதவீதற்கும் மேல் கரிம சத்து கொண்ட மண்ணில் விளையும் விளைப் பொருட்களுக்கு கூடுதல் விலை வழங்க வேண்டும் என்பது இவ்வியக்கத்தின் பிரதான பரிந்துரைகள் ஆகும்.

    மண் வளப் பாதுகாப்பு குறித்த சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வலியுறுத்தி சத்குரு, மண் காப்போம் இயக்கத்தை இந்தாண்டு தொடங்கினார். இதற்காக அவர் மார்ச் 21-ம் தேதி முதல் 100 நாட்களில் 27 நாடுகளுக்கு மோட்டார் சைக்கிளில் சவாலான பயணம் மேற்கொண்டு உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் விளைவாக, 74 நாடுகள், 11 இந்திய மாநிலங்கள், 9 ஐ.நா அமைப்புகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்தன. மேலும், இதுவரை 391 கோடி மக்களும் இவ்வியக்கத்திற்காக குரல் கொடுத்துள்ளனர்.

    இந்நிலையில், உலக மண் தினமான இன்று (டிச.5) தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இவ்வியக்கத்தின் தன்னார்வலர்கள் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை ரெயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன
    • மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் சத்குரு நன்றி தெரிவித்தார்

    உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கும் துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும், மண் அழிவை தடுக்க உலகின் கவனத்தை ஈர்க்கவும் சிறப்பு லேசர் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    2 நிமிட லேசர் ஷோவில் மண் அழிவு குறித்தும் அதை உடனே சரி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் சத்குரு பேசியுள்ள செய்தி மற்றும் அவருடைய 100 நாள் மோட்டார் சைக்கிள் பயண காட்சிகள், மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள சர்வதேச தலைவர்கள், விஞ்ஞானிகள், பிரபலங்களின் காணொளிகளும் ஒளிபரப்பப்பட்டன.

    இது தொடர்பான நிகழ்ச்சியில் சத்குரு அவர்கள் ஆன்லைன் வாயிலாக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், "மண் வளத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைநோக்கும் பார்வையும், செயல்களும் பாராட்டுக்குரியதாக உள்ளது. மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள அனைத்து மக்களுக்கும் நன்றிகள்.

    சவாலான மோட்டர் சைக்கிள் பயணம் முடிந்துவிட்டது. ஆனால், உண்மையில் கடினமான வேலை இப்போது தான் தொடங்கியுள்ளது. மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகள் எவ்வளவு வேகமாக நாம் நடைமுறைப்படுத்த போகிறோம் என்பது தான் இப்போதைய முக்கிய சவால்.

    மண் காப்போம் இயக்கம் உலகம் முழுவதும் 'மண்' குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இவ்வியக்கத்தின் தாக்கத்தால் மக்களும், அரசாங்கங்களும் மண் வளத்தை மீட்டெடுக்கும் கொள்கைகளை உருவாக்குவது குறித்து கலந்துரையாடல் நிகழ்த்த தொடங்கியுள்ளன. இத்திட்டங்களுக்கான நிதிகளும் ஒதுக்கப்பட தொடங்கியுள்ளன. இருப்பினும், அந்த சட்டங்கள் களத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் வரை நம்முடைய பணி நிறைவு பெற போவதில்லை" என்றார்.

    Actyv.ai நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக சி.இ.ஓ திரு. ரகு சுப்பிரமணியன் மற்றும் 1Digi Investment Management நிறுவனம் இந்நிகழ்ச்சியை நடத்த நன்கொடை வழங்கியது. இது குறித்து திரு. ரகு சுப்பிரமணியன் கூறுகையில், "சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகிய மூன்றும் எங்கள் வர்த்தகத்தின் முக்கிய அம்சங்கள். சத்குரு தலைமையிலான மண் காப்போம் இயக்கத்துடன் இணைந்து செயலாற்றுவதில் Actyv.ai நிறுவனம் பெருமை கொள்கிறது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திருமதி. மரியம் பிண்ட் முகமது அல்ஹெரி பேசுகையில், "எங்களுடைய அரசு மண் காப்போம் இயக்கத்திற்கு முழு ஆதரவு அளித்துள்ளது. இவ்வியக்கத்துடன் இணைந்து நாங்கள் செய்ய உள்ள பணிகள் எதிர்கால சந்ததியினருக்காக மதிப்புமிக்க மண்ணை பாதுகாக்கும் பணியின் தொடர்ச்சியாக இருக்கும்" என்றார்.

    புர்ஜ் கலிஃபா மட்டுமின்றி, நயாகரா நீர் வீழ்ச்சி, ஜெனிவாவில் உள்ள ஜெட் டியோ, தி மோண்ட்ரியல் ஒலிம்பிக் மைதானம், டொரோண்டோ டிவி டவர், மும்பை மாநகராட்சி கட்டிடம், சென்னை மற்றும் ஹூப்ளி ரயில் நிலையங்கள் என 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாக மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நா அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வியக்கம் கடந்த 3 மாதங்களில் 390 கோடி மக்களை சென்றடைந்துள்ளது. மேலும், 8 இந்திய மாநிலங்கள் இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.

    • அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு தகவல்.
    • ஆதியோகி முன்பு நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    கோவை:

    மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி 100 நாட்களில் 27 நாடுகளுக்கு ஆபத்தான மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சத்குரு, வெறும் 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு அடுத்த ஒன்றரை மாதத்தில் 21 நாடுகளுக்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாக ஆதியோகியில் நேற்று (ஜூன் 21) இரவு நடந்த நிறைவு நிகழ்ச்சியில் சத்குரு பேசியதாவது:

    இந்த 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தில் நான் பல ஆபத்தான தருணங்களை கடந்து வந்துள்ளேன். பைக் ஓட்டும்போது கவனம் மிக மிக அவசியம். ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, அதிவேகமாக பைக் ஓட்டும் போது ஒரு நொடி கவனம் சிதறினாலும், விளைவு மிக மோசமாக இருக்கும். துபாய் போன்ற பாலைவன நாடுகளில் பைக் ஓட்டும் போது வெயில் 54 டிகிரி சுட்டெரித்தது. குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் செல்லும் போதும் வெயில் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு பிறகு குளிர்ச்சியான சூழலை இங்கு தான் அனுபவிக்கிறேன்.

    உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவின் மூலம் இந்த 100 நாள் மோட்டார் சைக்கிகள் பயணம் நிறைவு அடைந்துவிட்டது. ஆனால், இனிமேல் தான் உண்மையில் கடினமான வேலை தொடங்க உள்ளது. 'மண் காப்போம்' இயக்கத்தின் அடுத்த கட்டமாக, 4 நாட்கள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் எனது பயணத்தை தொடங்க உள்ளேன்.

    அடுத்த ஒன்றரை மாதத்தில் அமெரிக்கா, ஐரோப்பா, கரிபீயன் நாடுகளில் உள்ள 21 முதல் 22 நாடுகளுக்கு பயணம் செய்து அந்நாடுகள் மண் வளப் பாதுகாப்பிற்கு சட்டங்கள் இயற்றுவதற்கு வலியுறுத்த உள்ளேன். அதுமட்டுமின்றி, அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள் உலகில் உள்ள அனைத்து நாடுகளும் மண் வளப் பாதுகாப்பிற்கான கொள்கைகளை உருவாக்க அழுத்தம் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.

    எனவே, இந்த 100 நாள் பயணம் முடிந்துவிட்டது என நீங்கள் நினைத்து அமைதியாகவிட கூடாது. உலக நாடுகள் அனைத்து உரிய சட்டங்கள் இயற்றும் வரை நீங்கள் தொடர்ந்து இதற்கு குரல் கொடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் அடுத்த ஒரு வருடத்திற்கு தினமும் குறைந்தப்பட்சம் 15 நிமிடங்களாவது மண் வளப் பாதுகாப்பு குறித்து பேச வேண்டும். இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இதை செய்ய வேண்டும். சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தெரியாதவர்கள் மற்றவர்களுடன் நேரில் இது குறித்து பேச வேண்டும்.

    இவ்வாறு சத்குரு பேசினார்.



    மேலும், இப்பயணம் வெற்றி பெற உறுதுணையாக இருந்த மக்களுக்கு நன்றி கூறும் விதமாக சத்குரு வெளியிட்டுள்ள பதிவில், "நம் காலத்தின் அதிமுக்கியமான #SaveSoil இயக்கத்தை நிகழ்த்த வியக்கத்தக்க அர்ப்பணிப்புடனும் நோக்கத்துடனும் உலகெங்கும் ஒன்றிணைந்த ஈஷா குழுவிற்கு மகத்தான நன்றிகள். உங்கள் பிராந்தியங்களில் மண் காக்கும் கொள்கைகள் இயற்றப்படும் வரை முழுவீச்சில் தொடருமாறு உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

    ஆதியோகி முன்பு நடந்த இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழ்நாடு எல்லையான பண்ணாரியில் இருந்து ஆதியோகி வரை வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    'மண் காப்போம்' இயக்கத்துடன் இதுவரை இந்தியாவின் 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன. 74 நாடுகளும் பல்வேறு ஐ.நா அமைப்புகளும், 320 கோடி மக்கள் சமூக வலைத்தளங்கள் மூலமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    • மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு நாளை தமிழகம் திரும்புகிறார்
    • கொடிசியாவில் நாளை மாலை நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியில் சத்குரு பங்கேற்கிறார்.

    கோவை:

    மண் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் 65 வயதில் சுமார் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள சத்குரு நாளை (ஜூன் 21) தமிழ்நாடு திரும்ப உள்ளார். இதையொட்டி, கொங்கு மண்டலத்தில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தன்னார்வலர்களும், பொது மக்களும் தயாராகி வருகின்றனர்.

    சத்தியமங்கலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும் சத்குருவிற்கு பண்ணாரி கோவில் அருகே மேள தாளங்களுடன் தன்னார்வலர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர். இதை தொடர்ந்து எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், கிராம மக்களும் திரளாக வந்து சத்குருவை வரவேற்க உள்ளனர்.

    அதன்பிறகு, சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெறும் 'மண் காப்போம்' இயக்க நிகழ்ச்சியிலும் மாலையில் கொடிசியாவில் நடைபெறும் உலக யோகா தின நிகழ்ச்சியிலும் சத்குரு பங்கேற்கிறார்.



    பின்னர், அங்கிருந்து, பேரூர், மாதம்பட்டி, இருட்டுப்பள்ளம் வழியாக இரவு 8.30 மணியளவில் ஆதியோகியை வந்து அடைய உள்ளார். வரும் வழியெங்கும் கிராம மக்களும், பழங்குடி மக்களும் பறையாட்டம், தேவராட்டம், ஜமாப், ஒயிலாட்டம், சிவ வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் சத்குருவை வரவேற்க உள்ளனர். ஆதியோகி முன்பு நடக்கும் நிறைவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய சத்குரு, ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக இந்தியா வந்து பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தார். சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய இப்பயணத்தின் மூலம் இதுவரை 74 நாடுகள் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியாவில் இதுவரை 8 மாநிலங்கள் 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. உலகம் முழுவதும் உள்ள 320 கோடி மக்களின் ஆதரவை இவ்வியக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    • மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றார் சத்குரு

    மும்பை:

    இந்தியாவின் 5-வது மாநிலமாக மஹாராஷ்டிரா அரசு தனது மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

    மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் சத்குரு மற்றும் மஹாராஷ்ட்ரா சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே ஆகிய இருவரும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாறிக் கொண்டனர். முன்னதாக, முதல்வர் திரு. உத்தவ் தாக்கரே அவர்களின் இல்லத்திற்கு சென்ற சத்குரு, மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான நடைமுறைக்கு உகந்த, அறிவியல் தீர்வுகள் அடங்கிய 'கொள்கை விளக்க கையேட்டை' முதல்வரிடம் வழங்கினார்.

    இது தொடர்பாக, மஹாராஷ்ட்ரா முதல்வர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "முதல்வர் உத்தவ் பாலசாஹேப் தாக்கரே அவர்களை சத்குரு இன்று சந்தித்து மண் காப்போம் இயக்கம் குறித்து பேசினார். மண் வளத்தை பாதுகாப்பதற்காக இவ்வியக்கத்திற்கு மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் தெரிவித்தார்" என பதிவிடப்பட்டுள்ளது.

    இதற்கு நன்றி தெரிவித்துள்ள சத்குரு, "நமஸ்காரம், மாண்புமிகு முதல்வர் உத்தவ் தாக்கரே, மண் காப்போம் இயக்கத்திற்கான தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றி. வளர்ச்சி மாநிலமான மஹாராஷ்ட்ரா, உங்களுடைய தலைமையின் கீழ் ஆரோக்கியமான மண்ணையும், வளமான விவசாய சமூகத்தையும் உருவாக்கும் பணியில் சிறந்த வழிகாட்டியாக திகழட்டும்" என தெரிவித்துள்ளார். 


    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் சத்குரு, ஆதித்யா தாக்கரே

    அதேபோல், ஆதித்யா தாக்கரே வெளியிட்டுள்ள பதிவில், "சத்குரு அவர்கள் எங்களுடைய இல்லத்திற்கு வருகை தந்ததை பெருமையாக கருதுகிறோம். அவர் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்களுடன் மண் காப்போம் இயக்கம் குறித்து கலந்துரையாடினார். இவ்வியக்கத்திற்கும், எங்களது நிலைத்த வளர்ச்சிக்கான குறிக்கோள்களுடன் ஒத்துப்போகும் பிற முன்னெடுப்புகளுக்கும் மஹாராஷ்ட்ரா ஆதரவு அளிக்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளார்" என பதிவிட்டுள்ளார்.

    மண் காப்போம் இயக்கம் சார்பில் மும்பையில் நடந்த இந்நிகழ்ச்சியில் 10000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் சத்குரு பேசுகையில், "15 முதல் 18 இன்ச் வரையிலான மேல்புற மண் தான் பூமியின் செழிப்பிற்கும் நாம் உயிர் வாழ்வதற்கும் உதவியாக உள்ளது. கடந்த 40 முதல் 50 வருடங்களில் நாம் சுமார் 52 சதவீதம் மேல்புற மண்ணை இழந்துவிட்டோம். இப்போது இருக்கும் மக்கள் தொகையை கொண்டு பூமியில் ஒரு இன்ச் வளமான மண்ணை உருவாக்க 13,000 வருடங்கள் தேவைப்படும். அந்தளவிற்கு இது கடினமானது.

    கடந்த காலத்தில் நம் நாடு எதிர்கொண்ட கடுமையான பஞ்சத்தை எதிர்கொள்ள 'பசுமை புரட்சி' உதவியது. ஆனால், அது தற்காலிகமான தீர்வு தான். மண்ணை எப்போதும் வளமாக வைத்திருப்பது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும். இதற்கு நாம் நம்முடைய விவசாய கொள்கைகளில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ நாம் அனைவரும் மண் அழிவிற்கு காரணமாக உள்ளோம். எனவே இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும்" என்றார்.

    சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்யா தாக்கரே பேசுகையில், "நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோம். மண் வளத்தை மீட்டெப்பதில் நாம் இந்த தலைமுறையிலேயே செயல் செய்ய வேண்டும், இல்லாவிட்டால், நமக்கு நல்ல எதிர்காலம் இருக்காது." என்றார்.

    இந்நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகைகள் ஜூஹி சாவ்லா, மெளனி ராய், இசை கலைஞர்கள் மீட் பிரதர்ஸ் உட்பட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

    • மண் வளம் இழப்பதை நம்மால் சரி செய்ய முடியும் என சத்குரு நம்பிக்கை தெரிவித்தார்
    • மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணம்

    இந்தியாவின் மூன்றாவது மாநிலமாக, உத்தரப் பிரதேச அரசு தங்கள் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக 'மண் காப்போம்' இயக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. முன்னதாக, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மண் காப்போம் இயக்கம் சார்பில் லக்னோவில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் சத்குரு முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில், அம்மாநிலத்தின் வேளாண் துறை அமைச்சர் சூர்யா பிரதாப் சாஹி, அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேஸ் பிண்டால், தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அதிகாரிகளும், ஆயிரக்கணக்கான மக்களும் பங்கேற்றனர்.

    விழாவில் சத்குரு பேசுகையில், "மனித குல வரலாற்றில் தற்போது முதல் முறையாக உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் 'மண் அழிவு' என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர்" என கூறி மண் வளம் இழப்பதன் இக்கட்டான நிலையை சுட்டிகாட்டி பேசினார். மேலும், இதை நம்மால் சரி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்திய சத்குரு, "மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த முயற்சியில் பாரதம் உலகிற்கு முன்னோடியாக தலைமை வகிக்க வேண்டும். ஏனென்றால், நாம் பாரதத்தில் மண்ணை 'தாய் மண்' என அழைக்கிறோம். குறிப்பாக, அதிக விவசாய நிலப்பரப்பை கொண்டுள்ள நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் இந்த முயற்சியில் தலைமை வகிக்க வேண்டும்" என்றார்.

    சத்குருவின் கருத்துக்களை வரவேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், "சத்குரு அவர்கள் 'நதிகளை மீட்போம்; பாரதம் காப்போம்' இயக்கத்திற்காக கடந்த முறை உத்தரப் பிரதேசம் வந்ததற்கு பிறகு நாங்கள் 60 நதிகளுக்கு புத்துயிரூட்டும் பணிகளை செய்து வருகிறோம்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், அம்மாநிலத்தில் மண் வளத்தை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், கங்கை நதியை தூய்மையாக வைத்து கொள்ள மேற்கொள்ளப்படும், 'நமாமி கங்கா' திட்டம் குறித்தும் பேசினார். அத்துடன், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

    மண் வளத்தை மீட்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி 100 நாள் மோட்டார் சைக்கிள் பயணத்தை சத்குரு மார்ச் 21-ம் தேதி தொடங்கினார். ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்து பின்னர் சத்குரு கடந்த மாதம் 29-ம் தேதி இந்தியா வந்தார். குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, டில்லி ஆகிய மாநிலங்களுக்கு சென்ற அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்று இவ்வியக்கத்திற்கு மனமார்ந்த ஆதரவை தெரிவித்தார்.

    • இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் நீண்ட கால முன்னெடுப்பில் அனைவரும் பங்கெடுக்க சத்குரு வேண்டுகோள்
    • மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    புதுடெல்லியில் உள்ள விக்ஞான் பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 'மண் காப்போம்' இயக்கத்திற்கு தனது மனமார்ந்த ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    இவ்வியக்கம் மனித குலத்திற்கு மிகப்பெரிய சேவையாற்றும் என கூறிய அவர், சத்குருவின் 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம் குறித்து பேசுகையில், "சத்குரு மேற்கொண்டுள்ள இந்தப் பயணம் மிகவும் கடினமானது. இது ஒரு மிகப்பெரிய வெற்றி. இந்தப் பயணத்தின் மூலம் உலகளவில் மண்ணின் மீதான அன்பு அதிகரித்துள்ளது. மேலும், பாரத மண்ணின் வலிமையையும் இந்தப் பயணம் உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது" என்றார்.

    உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (ஜூன் 5) நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியில், அரங்கு முழுவதும் அரசியல் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள், முக்கிய ஆளுமைகள் என நிரம்பி இருந்தது.

    முன்னதாக, சத்குரு பேசுகையில், "நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வது, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது, பல்லுயிர் பெருக்கத்தை அதிகரிப்பது போன்ற எல்லாவற்றிற்கும் மண் வளத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, மண் அழிவை தடுத்து, இழந்த மண் வளத்தை மீட்டெடுக்கும் இந்த நீண்ட கால முன்னெடுப்பில் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் பங்கெடுக்க வேண்டும். மக்கள் குரல் கொடுத்தால் தான் அரசாங்கங்கள் இதுபோன்ற நீண்டகால திட்டங்களை செயல்படுத்த முன்வரும்" என்றார்.

    மண் வளத்தை மீட்டெடுக்கும் இம்முயற்சியில் பிரதமர் மோடி அவர்கள் முழு ஆதரவு அளித்து பல்வேறு வளர்ச்சி படிகளை எடுக்க வேண்டும் எனவும் சத்குரு வேண்டுகோள் வைத்தார். மேலும், நிகழ்ச்சிக்கு பிறகு பிரதமரை சந்தித்து 'மண் காப்போம்' இயக்கத்தின் கொள்கை விளக்க கையேட்டினையும் வழங்கினார். மண் வளத்தை மீட்டெடுக்க அரசாங்கங்கள் மேற்கொள்ள வேண்டிய எளிய வழிமுறைகள் மற்றும் அறிவியல் தீர்வுகள் அந்த கையேட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் சுமார் 250 கோடி மக்களை இவ்வியக்கம் சென்றடைந்துள்ளது. அத்துடன், மண் வளத்தை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி 15 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் பாரத பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

    இது தவிர, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நட்டு சாதனை படைத்துள்ளனர். மேலும், மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலர்கள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாரத்தான், வாக்கத்தான் போன்ற நிகழ்ச்சிகள் மூலம் மண் வள விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    • சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது.
    • மண் வளம் இழப்பதால் நாம் உண்ணும் உணவின் சத்தும் குறைந்து வருகிறது.

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மண் வளப் பாதுகாப்பை வலியுறுத்தி சென்னை மயிலாப்பூரில் இருந்து செங்கல்பட்டு வரை 55 கி.மீ தூரத்திற்கு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று (ஜூன் 5) நடைபெற்றது.

    இந்தப் பேரணி பாப் (BOB) அமைப்பு சார்பில் சத்குரு தொடங்கியுள்ள 'மண் காப்போம்' இயக்கத்திற்கு ஆதரவாக நடத்தப்பட்டது. இதில் சவேரா ஹோட்டலின் இணை நிர்வாக இயக்குநர் திருமதி. நினா ரெட்டி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் இருந்து காலை 5 மணிக்கு தொடங்கிய இப்பயணம் செங்கல்பட்டில் உள்ள கொண்டங்கி கிராமத்தில் நிறைவு பெற்றது.

    இது தொடர்பாக, அதில் பங்கேற்ற தன்னார்வலர்கள் கூறுகையில், "உலகளவில் மண்ணின் வளம் மிக வேகமாக அழிந்து வருகிறது. தற்போது இருக்கும் மண் வளத்தை கொண்டு அடுத்த 45 முதல் 60 ஆண்டுகள் மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. மேலும், 2045-ம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 900 கோடியை தாண்டிவிடும்; ஆனால், உணவு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துவிடும் என ஐ.நாவின் ஆய்வு கூறுகிறது. இதனால், உலகில் உணவு பஞ்சம் ஏற்பட்டு, மக்கள் அதிகளவில் இடம்பெயறுவார்கள், உள்நாட்டு போர்கள் மூளும் வாய்ப்பும் உள்ளது. மேலும், மண் வளம் இழப்பதால் நாம் உண்ணும் உணவின் சத்தும் குறைந்து வருகிறது.

    எனவே, மண் வளம் இழப்பதை தடுக்கவும், இழந்த வளத்தை மீட்டெடுக்கவும் அரசாங்கங்கள் சட்டங்கள் இயற்ற வலியுறுத்தி 'மண் காப்போம்' என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை சத்குரு தொடங்கியுள்ளார். இதற்காக அவர் லண்டன் முதல் தமிழ்நாடு வரை 100 நாட்களில் 30,000 கி.மீ தனி ஆளாக மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

    உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவ்வியக்கத்திற்கு இதுவரை 74 நாடுகளும், ஐ.நாவின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும் ஆதரவு அளித்துள்ளன" என தெரிவித்தனர்.

    இதுதவிர சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஜூன் 3, 4 மற்றும் 5 ஆகிய 3 நாட்களில் தமிழ்நாடு முழுவதும் விவசாய நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஏக்கரில் 4,000 மரக்கன்றுகளையும், திருவள்ளூரில் 13 ஏக்கரில் 4,800 மரக்கன்றுகளையும், செங்கல்பட்டில் 7 ஏக்கரில் 1,450 மரக்கன்றுகளையும் விவசாயிகள் நடவு செய்தனர்.

    சுற்றுச்சூழல் மேம்பாட்டுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக, தேக்கு, செம்மரம், சந்தனம், மகோகனி, வேங்கை, மலை வேம்பு போன்ற பண மதிப்புமிக்க மரங்கள் நடப்படுகின்றன. காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் விவசாய நிலங்களின் மண் மற்றும் நீரின் தரத்தை ஆய்வு செய்து மண்ணுக்கேற்ற மர வகைகளை பரிந்துரை செய்தனர்.

    வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ×